பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான இலங்கை நீச்சல் வீரர்கள்!

Wednesday, February 21st, 2018

அவுஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் என்ற நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும்இலங்கை நீச்சல் அணிக்கான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நீச்சல் போட்டியில் நான்கு வீரர்களும் இரண்டு வீராங்கனைகளும் பங்குகொள்ளவுள்ளனர்.

அண்மையில் சர்வதேச நீச்சல் போட்டிகளில் விசேட ஆற்றல்களை வெளிப்படுத்திய கிம்கோ கிமிக்கோ ரஹிம் மற்றும் மினோலி களுவாராட்சி ஆகிய வீராங்கனைகளும் சரந்தசில்வா மத்தியூ அபேசிங்க கையில் அபேசிங்க அகலங்கா பீரிஸ் ஆகிய வீரர்களும் இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts: