பொதுநலவாய போட்டி: மகாராணியின் செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல்!

Friday, October 13th, 2017

2018 பொதுநலவாய போட்டிகளுக்காக பிர்த்தானிய மகாராணி விடுத்த செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல் இலங்கைக்கும் கொண்டுவரப்படவுள்ளது.

1930 ஆம் ஆண்டு தொடக்கம் அனுசரிக்கப்படும் பாரம்பரியத்திற்கு அமைய இந்த கோல் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கமாகும். இதன் பிரகாரம் கோலைக் கொண்டுவரும் அதிகாரிகள் இன்று பிற்பகல் 4 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: