பொதுநலவாயப் போட்டியிலும் சாதித்துக்காட்டினார் ஆசிகா!

80 நாடுகள் பங்குபற்றிய கனிஷ்ட பிரிவினருக்கான பொதுநலவாய பளுதூக்கும் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்தார் யாழ்ப்பாணம் சுண்டுக்களி பெண்கள் பாடசாலையின் வீராங்கனையான வி.ஆசிகா. மலேசியாவில் தொடர் நடைபெற்று வருகின்றது. பெண்கள் பிரிவு பளுதூக்கும் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 58கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய ஆசிகா, ஒட்டுமொத்தமாக 139 கிலோ பளுவைத் தூக்கியே வெண்கலம் வென்றார். இதைவிட நடப்பு வருடத்தில் மட்டும் ஆசிகா 3 தேசியப் பதக்கங்களைக் கைப்பற்றியிருந்தார்.
தேசியமட்டப் போட்டியில் 135 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்டப் போட்டியில் 141 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், பாடசாலைகள் சம்மேளனத்தின் தேசிய மட்டப்போட்டியில் 151 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியதுடன் சிறந்த பளுத்தூக்கல் வீராங்கனை என்ற அடைவையும் ஏற்படுத்தியிருந்தார். அத்தனை தேசிய மட்டப் போட்டிகளிலும் சாதித்த ஆசிகா, தற்போது பொதுநலவாயப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை வலுவாகவே நிலை நாட்டியுள்ளார். இவர் கடந்த வருடமும் பொதுநலவாயப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|