பெல்ஜியம் அணிக்கு  3வது இடம்!

Saturday, July 14th, 2018

உலக கோப்பை கால்பந்து தொடரில் முதன்முறையாக 3வது இடம் பிடித்தது பெல்ஜியம். இங்கிலாந்து அணியை 2-0 என வீழ்த்தியது.
ரஷ்யாவில், 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த 3வது இடத்துக்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த உலகின் ‘நம்பர்-3’ பெல்ஜியம் அணி, 12வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் நாசர் சாட்லி ‘பாஸ்’ செய்த பந்தில் பெல்ஜியத்தின் தாமஸ் மெனியர் முதல் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் பெல்ஜியம் 1-0 என, முன்னிலை வகித்திருந்தது. 82வது நிமிடத்தில் கெவின் டி புரூய்ன் ‘பாஸ்’ செய்த பந்தை பெல்ஜியம் கேப்டன் ஈடன் ஹசார்டு கோலாக்கினார். கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணியால் எவ்வித பதிலடியும் தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் பெல்ஜியம் முதன்முறையாக 3வது இடம் பிடித்தது. இதற்கு முன், அதிகபட்சமாக 1986ல் மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை தொடரில் 4வது இடம் பிடித்திருந்தது.

Related posts: