பெயர் சூட்டும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!

Thursday, March 15th, 2018

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டரங்கிற்கு ஒலிம்பியன் கலாநிதி நா.எதிர்வீரசிங்கம் என்னும் பெயர் சூட்டும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கடந்த மாதம் 18 ஆம் திகதி தம்பர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை மூன்று மொழிகளிலும் பெயர் பொறிப்பது பொருத்தமானது எனவும் எனினும் இடப்பற்றாக்குறை காணப்படுமிடத்து ஆங்கிலத்தில் பெயர் பொறிப்பது சிறந்தது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: