பென் ஸ்டாக்ஸை ஒப்பந்தம் செய்துள்ள இங்கிலாந்தின் கிரிக்கட் கழகம்!

Friday, December 1st, 2017

தாக்குதல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் கிரிக்கட் வீரர் பென் ஸ்டாக்ஸை, இங்கிலாந்தின் கிரிக்கட் கழகம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்தின் கென்டர்பரி கழகத்தின் வெளிநாட்டு கழகங்களுக்கு இடையிலான போட்டிகளுக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் நியுசிலாந்தில் நடைபெறும் ஃபோர்ட் கிண்ண கழகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிஸ்டலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர், தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து குழாமிலும் இணைக்கப்படவில்லை. அவர் மீதான விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: