உதைபந்தாட்ட மத்தியஸ்தராக வடமராட்சியைச் சேர்ந்த விதுர்ஷா தெரிவானார்!

Tuesday, January 9th, 2018

வடக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக உதைபந்தாட்ட மத்தியஸ்தர் பரீட்சையில் வடமராட்சியைச் சேர்ந்த நவரடனம் விதுர்ஷா (பிரபா) சித்திடைந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 07.01.2018 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற உதைபந்தாட்ட மத்தியஸ்தர் தெரிவுப் பேட்டியில் பருத்தித்துறை லீக் சார்பாகவும் வட அல்வை நக்கீரன் விளையாட்டுக்கழகம் சார்பாகவும் பங்குபற்றியிருந்த விதுர்ஷா யாழ்ப்பாணத்தின் ஒரே ஒரு பெண் மத்தியஸ்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

26755277_1640206766018404_1953510200_n

Related posts: