பெண்கள் கரப்பந்தாட்டத்தில் தெல்லிப்பழை சம்பியனானது!

Thursday, April 5th, 2018

யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.

ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணியை எதிர்த்து பருத்தித்துறை பிரதேச செயலக அணி மோதியது. முதலாவது செற்றில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணி 25:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. இரண்டாவது செற்றை 25:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றிப் பதிலடி கொடுத்தது பருத்தித்துறைப் பிரதேச செயலக அணி. ஆட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான செற்றில் 25:18 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று 2:1 என்ற செற் கணக்கில் கிண்ணம் வென்றது தெல்லிப்பழை பிரதேச செயலக அணி.

Related posts: