பெண்களுக்கான கால்பந்தாட்டம் கிளிநொச்சி மாவட்டம் சம்பியன்!

Wednesday, May 9th, 2018

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெண்களுக்கான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி சம்பியனானது.

மேற்படி போட்டிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணியை எதிர்த்து யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணி மோதியது. ஆட்டநேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒருகோலைப் பெற்றிருந்தன.

வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. இதில் கிளிநொச்சி மாவட்ட அணி, 4:3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் யாழ். மாவட்ட அணியின் தொடர்ச்சியான 3 வருடகால வெற்றிக்கு கிளிநொச்சி மாவட்டம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதேவேளை ஆண்களுக்கான போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி, வவுனியா மாவட்ட அணியை வென்றது.

தொடர்ந்து பை மூலமாக இரண்டாம் சுற்றுக்குள் நேரடியாக நுழைந்த மன்னார் மாவட்டத்துடன் முல்லைத்தீவு மாவட்ட அணி மோதியது. இதில் மன்னார் மாவட்ட அணி 5:1 என்ற கோல்கள் அடிப்படையில் வென்று இறுதிக்குள் நுழைந்தது.

மறுபக்கத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணிக்கும் கிளிநொச்சி மாவட்ட அணிக்கும் இடையில் போட்டி இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்ட அணி 7:2 என்ற கோல்கள் கணக்கில் வென்று இறுதிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

Related posts: