புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்த யுவராஜ் சிங்!

Tuesday, June 6th, 2017

சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாகிஸ்தானுக்கெதிராகன ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய யுவராஜ் சிங் தன் ஆட்டத்தை புற்றுநோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்தது.இந்திய அணி சார்பில் அசத்தலாக விளையாடிய யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், #CancerSurvivorDay அன்று நான் விளையாடிய இந்த இன்னிங்ஸை புற்றுநோயை வென்று வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும், லண்டன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனைகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்குக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, சில வருடங்களுக்கு முன்னர் அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: