புது மாப்பிள்ளைக்கு இந்திய கிரிக்கட்டின் பரிசு 10 கோடி!

Sunday, December 17th, 2017

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். தம்பதியினருக்கு பல நாடுகளிலிருந்தும் வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

(இந்திய கிரிக்கெட் சபை) சப்ரைஸ் பரிசு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரப்பட்டிருந்தது, தலைவர் விராட் கோஹ்லியும் வீரர்களுக்கான சம்பளம் போதாது என தனது அதிர்ப்தியை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பில் பிசிசிஐ யிடம், கோஹ்லி, டோனி முதலானோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதனடிப்படையில் சம்பளப்பணத்தை அதிகரிக்க பிசிசிஐ முடிவுசெய்திருந்தது.

இந்திய மதிப்பில் 2 கோடி சம்பளம் வாங்கிவந்த வீரர்களுக்கு 5 கோடியாக அதிகரித்ததுடன், டோனி மற்றும் கோஹ்லியின் சம்பளம் 7 தொடக்கும் 8 கோடியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 5 கோடி சம்பளம் வாங்கிவந்த விராட் கோஹ்லிக்கு அதனை இரண்டு மடங்காக அதிகரித்து 10 கோடியாக வழங்கவவும், டோனியின் சம்பளப்பணத்தை 9 கோடியாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விராட் கோஹ்லிக்கு 10 கோடி வழங்கப்படும் என்றால், உலக கிரிக்கெட் வீரர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுக்கொள்வார். அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்  மட்டுமே 9 கோடி பெறும் வீரராக காணப்படுகின்றார்.

Related posts: