புதுமுக வீரர் சமிந்த பண்டார இங்கிலாந்து செல்கிறார்!

Friday, June 3rd, 2016

இங்கிலாந்து தொடரில் உபாதைக்கு உள்ளான இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவுக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் சமிந்த பண்டார அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இலங்கை அணி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  இப் போட்டிக்கான புதுமுக வீரர் சமிந்த பண்டார அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் ஏற்கனவே தம்மிக்க பிரசாத் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக குசல் பெரேரா அணியில் இணைந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: