புதுப்பொலிவாக்கப்படும் சுகததாச விளையாட்டு அரங்கு!

Thursday, August 24th, 2017

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு நவீன மயப்படுத்தப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்காக 190 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் இவ்வாரத்தில் இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளை இரண்டு அல்லது இரண்டரை மாத காலப்பகுதியில் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளை இலக்காக கொண்டு வீர வீராங்கனைகளுக்கான பயிற்சிகளை மீண்டும் இங்கு ஆரம்பிக்கலாம் என்றும் அமைச்சர் இதன் நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

Related posts: