புதிய வரலாறு படைத்த ரொனால்டோ!

Friday, June 24th, 2016

ஐரோப்பிய கால்பந்து தொடரில் ஹங்கேரி அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்தன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து தொடரில் முதல் 2 போட்டிகளிலும் ரொனால்டோ கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரியா அணியுடனான போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் ஹங்கேரி அணிக்கு எதிராக ரொனால்டோ 2 கோல் அடிக்க, போர்த்துக்கல் அணி நூலிழையில் தப்பி “நாக்-அவுட்” சுற்றுக்கு முன்னேறியது.

இந்த கோல்கள் மூலம் 4 ஐரோப்பிய கால்பந்து தொடர்களிலும் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

போர்த்துக்கல் அணியின் தலைவராக கலக்கி வரும் ரொனால்டோ, 2004ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து தொடரில் 2 கோலும், 2008ம் ஆண்டில் ஒரு கோலும், 2012ம் ஆண்டு தொடரில் 3 கோலும் அடித்தார்.

தற்போது பிரான்ஸில் நடந்து வரும் ஐரோப்பிய தொடரிலும் 2 கோல்கள் அடித்தன் மூலமாக 4 ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Related posts: