புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!

Sunday, July 10th, 2016

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார்.

இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் செரீனாவை வீழ்த்தி கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணிய செரீனாவிற்கு இந்த இறுதிப்போட்டி சாதகமாக அமைந்தது.

முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன் விளையாடினார்கள். முதல் சர்வீஸை செரீனா தொடங்கினார். இந்த சுற்றை எந்தவித சிரமமுமின்றி கைப்பற்றினார்.

2-வது சுற்றை கெர்பர் தொடங்கினார். இதில் பிரேக் பாயிண்ட் வரை சென்ற பின் கெர்பர் கைப்பற்றினார். இதனால் தொடக்கத்திலேயே கெர்பர் நெருக்கடிக்கு உள்ளானார்.

அடுத்த சர்வீஸில் பாயிண்ட் ஏதும் கொடுக்காமல் செரீனா கைப்பற்றினார். அடுத்த செட்டை கெர்பர் கைப்பற்றினார். இப்படி 5-5 என சமநிலையில் சென்று கொண்டிருந்தது.

6-வது சர்வீஸையும் செரீனா கைப்பற்றினார். ஆனால் கெர்பர் தனது 6-வது சர்வீஸை கோட்டை விட்டதால் செரீனா 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார்.

அடுத்த செட்டில் 4-3 என்ற நிலையில் கெர்பரின் 4-வது சர்வீஸை திறமையாக செரீனா கையாண்டு தனதாக்கினார். இதனால் செரீனா 5-3 என முன்னிலை பெற்றார். அடுத்த தனது சர்வீஸை சிறப்பாக முடித்த செரீனா 6-3 என கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வியடைந்ததற்கு பழிதீர்த்தார். மேலும் செரீனா 7-வது முறையாக விம்பிள்டனை கைப்பற்றினார். அத்துடன் 22 கிராண்ட்ஸ்லாம் பதக்கங்கள் வென்று ஸ்டெபிகிராஃபின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: