புதிய மைல்கல்லை அடைந்த செரீனா வில்லியம்ஸ்!

Monday, September 5th, 2016

அமெரிக்கா நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 307வது வெற்றியைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான, யு.எஸ்.ஓபன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் மூன்றாம் சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்தவருமான செரீனா வில்லியம்ஸ், சுவீடனின் ஜோஹனா லார்சனை எதிர்கொண்டார்.

இதில், செரீனா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சுவீடன் வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் செரீனா வில்லியம்ஸின், 307வது வெற்றி இதுவாகும்.இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மகளிர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்திருந்த அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவாவின் (306 வெற்றிகள்) சாதனையை செரீனா வில்லியம்ஸ் தகர்த்தார்.

ஒட்டுமொத்தமாகவும் (ஆண்கள், மகளிர்) கிராண்ட்ஸ்லாமில் அதிக வெற்றிகளை குவித்துள்ள சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையையும் (307 வெற்றிகள்) செரீனா வில்லியம்ஸ் சமன் செய்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: