புதிய தொழிநுட்பத்துடன் களமிறங்கும் ஐபிஎல்!

Tuesday, March 27th, 2018

இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தப் போட்டியை விசுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் (Visual Reality Technology) மூலம்பார்க்கலாம் என்று ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பும்.

ஐபிஎல் போட்டிகளை ஹாட் ஸ்டார் ஆப் மூலமும் பார்க்க முடியும்.  தற்போது புதிதாக விசுவல் ரியாலிட்டி தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.

விஆர் என்ற தேர்வை தேர்வு செய்வதன் மூலம் போட்டிகளை விசுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப சாதனத்தில் கண்டு ரசிக்கலாம். இந்த புதிய முறை ரசிகர்களிடையே மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

Related posts: