புதிய தரவரிசையில் இலங்கை அணி பின்னடைவு!

Thursday, May 3rd, 2018

ஐசிசியின் புதிய இருபதுக்கு 20 தரப்படுத்தலின் படி இலங்கை அணி பாரிய சரிவுடன் 9 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

குறித்த தரவரிசையில் முதலாம் இடத்தில் பாகிஸ்தான் அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.

இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை 2014 ஆம் ஆண்டில் கைப்பற்றிய இலங்கை அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியை விட பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: