புதிய தரப்படுத்தல்களில் இலங்கை அணி முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் சபையால் (ICC) அறிவிக்கப்பட்ட புதிய தரப்படுத்தல்களில் ஒருநாள் தரப்படுத்தலில் இலங்கை அணி 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல்களின் அடிப்படையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தென்னாபிரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் ,இருபதுக்கு இருபது போட்டி தரப்படுத்தலில், நியூசிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் , இலங்கை அணி 8ம் இடத்தை பிடித்துள்ளது.
பெப்ரவரி மாத ஆரம்பத்தின் போது டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 7வது இடத்தில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகின் மூத்த கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்!
உலக கிண்ணத் தகுதியை இழந்தது இத்தாலி!
தம்புள்ளை வைகிங்ஸ் அணியின் அதிரடியான வெற்றி!
|
|