புதிய டெஸ்ட் தரவரிசை வெளியானது!

Wednesday, August 16th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவுக்கு வந்ததையடுத்து, சர்வதேச கிரிக்கட் பேரவை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியா தொடர்ந்தும் முதலிடம் நீடித்துள்ளது இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளது

அதன்படி, இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுஇந்திய அணியுடனான தொடரை இழந்த இலங்கை அணி 2 புள்ளிகள் குறைவடைந்துள்ளது.

எனினும், தரப்படுத்தலில் மாற்றமின்றி;இலங்கை அணி 7 வது இடத்திலேயே தொடர்ந்துமுள்ளது.புதிய தரப்படுத்தலின் படி, தென்னாபிரிக்க 2வது இடத்திலும் இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளன

அவுஸ்ரேலியா, நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் முறையே 4ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் இடங்களைப் பெற்றுள்ளன8ஆம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 9ஆம் இடத்தில் பங்களாதேஸ் அணியும் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இறுதி இடத்தை சிம்பாவே அணி பெற்றுள்ளது.

Related posts: