புதிய கழகத்தில் இணைகிறார் இங்கிலாந்து வீரர் ஜே றொட்றிகுஷ்

Tuesday, July 4th, 2017

இங்கிலாந்து அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்  ஜே றொட்றிகுஷ் (Jay Rodriguez )   புதிய கழகத்தில் இணைந்து கொள்ள உள்ளார்.

சவுத்ஹெம்டன் கழகத்தில் விளையாடி வந்த ஜே, வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் கழகத்தில் இணைந்து கொள்ள உள்ளார்.இவ்வாறு கழகங்களுக்கு இடையில் பரிமாறப்படுவதற்காக சவுத்ஹெம்டன் கழகத்திற்கு 12 மில்லியன் பவுண்ட்களை, வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் கழகம் வழங்க உள்ளது.27 வயதான ஜே கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு தடவைகள் உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: