பீபா உலகக் கிண்ண போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை – ஜியானி இன்பென்டினோ!

Monday, March 18th, 2019

எதிர்வரும் 3 மாதகாலப்பகுதியினுள் பீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என
பீபாவின் தலைவர் ஜியானி இன்பென்டினோ (Gianni Infantino) தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பீபா உலக கிண்ண போட்டிகளில் 48 அணிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் குறித்த போட்டிகள் பெரும்பாலும் கட்டார் மற்றும் அதனை அண்டிய அயல் நாடுகளில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான இறுதி முடிவு தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் பீபாவின் தலைவர் ஜியானி இன்பென்டினோ தெரிவித்துள்ளார்.

Related posts: