பி.பி.எல். இறுதி ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய சங்ககாரா!

Saturday, December 10th, 2016

வங்கதேசத்தில் நடந்த பிபிஎல் தொடர் இறுதி ஆட்டத்தில் சங்ககாராவின் அதிரடி ஆட்டத்தால் டாக்கா டைனமைட்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

வங்கதேசத்தில், ஏனைய அணிகளைச் சேர்ந்த அணி வீரர்கள் மற்றும் வங்கதேச வீரர்கள் இணைந்து பங்கேற்கும் பிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் அணியும், ராஜசாகி கிங்ஸ் அணியும் இன்று மிர்புர் மைதானத்தில் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டாக்கா டைனமைட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. டாக்கா டைனமைட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா 36 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவு அணியைச் சேர்ந்த லிவிஸ் 45 ஓட்டங்களும் குவித்தனர்.

ராஜசாகி கிங்ஸ் அணி சார்பில் பர்ஹத் ரீசா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதைத் தொடர்ந்து அடுத்து துடுப்பெடுத்தாடிய ராஜசாகி கிங்ஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால், அந்தணி இறுதியாக 17.4 ஓவர்களில் 103 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்து, 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதனால் பிபில் 2016/17 தொடரின் பட்டத்தை டாக்கா டைனமைட்ஸ் அணி முதன் முறையாக வென்று அசத்தியுள்ளது. டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த சங்ககாரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: