பி.எஸ்.எல் இறுதி ஆட்டம் – லாகூர் செல்ல வீரர்கள் மறுப்பு!

Wednesday, February 15th, 2017

பாகிஸ்தானின் லாகூர் நகரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலை அடுத்து, அங்கு நடைபெறுவதாக இருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட வெளிநாட்டு வீரர்கள் மறுத்துள்ளனர்.

லாகூரில் திங்கள்கிழமை மாலையில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அந்நகரத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இச்சம்பவத்துக்குப் பிறகான பாதுகாப்பு அச்சம் காரணமாக அங்கு சென்று விளையாட வெளிநாட்டு வீரர்கள் மறுத்துள்ளதாக பிஎஸ்எல் தலைவர் நஜம் சேத்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

வெளிநாட்டு வீரர்கள் இன்றி பிஎஸ்எல் போட்டியின் இறுதி ஆட்டத்தை லாகூரில் நடத்த பாகிஸ்தான் மக்கள் விரும்புகிறார்களா என்பதே இப்போது நம் முன் இருக்கும் ஒரே வாய்ப்பாகும். இறுதி ஆட்டம் ஒருவேளை லாகூரிலேயே நடைபெறுவதாக இருந்தால், மாநில அளவிலான பாதுகாப்பை அளிக்கத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மீண்டும் ஒருமுறை வெளிநாட்டு வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே முடிவு செய்யப்படும் என்று நஜம் சேத்தி கூறினார்.

PSL-2017-Drafting-Live-Streaming

Related posts: