பிளே ஒவ்ப் சுற்றுக்கு முதல் அணியாக நுழைந்தது jaffna kings!

Tuesday, December 14th, 2021

பிளே ஒவ்ப் சுற்றுக்கு முதல் அணியாக jaffna kings நுழைந்துள்ளது. இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14வது போட்டி இன்று இடம்பெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna Kings அணியும் Dambulla Giants அணியும் பலப்பரீட்சை நாடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யவ்னா கிங்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Dambulla Giants அணி நிர்ணயிக்கப்பட்ட 14.1 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 70 என்ற வெற்றியிலக்கினை நோக்கி யவ்னா கிங்ஸ் அணி 9.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்று 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

000

Related posts: