பிற்போடப்பட்டது இலங்கை அணியின் கிரிக்கெட் சுற்றுப் பயணம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்த இலங்கை அணியின் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணி இம்மாதம் 20 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான்ன மற்றும் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஏனைய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தின் போது 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி 20 போட்டிகள் இடம்பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையுடன் இந்தியாவும் ஐ.சி.சிக்கு எதிர்ப்பு!
குசல் மெண்டிஸிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!
2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத் அணி!
|
|