பிரேசிலிடம் பணிந்தது ஆர்ஜன்டினா!

Saturday, November 12th, 2016

உலக கிண்ண கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணியிடம் 3–0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்டினா தோல்வி அடைந்தது.

2018-ம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல நாடுகளில் நடந்து வருகிறது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அணிகள் தகுதி சுற்றில் பிரேசிலில் உள்ள பெலோ ஹாரிஸ்ன்ட் நகரில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பிரேசில்-ஆர்ஜன்டினா அணிகள் மோதின.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் இரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 25-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் கொடின்ஹோ கோல் அடித்தனர்.

அதன்பின் அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் 45-வது நிமிடத்திலும், பவுலின்ஹோ 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆர்ஜன்டினா. அணியில் நட்சத்திர வீரர் மெஸ்சி இருந்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிரேசில் 3–0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பிரேசில் வீரர் நெய்மர், அடித்த கோல் சர்வதேச போட்டியில் 50-வது கோல் ஆகும். பிரேசில் 11 ஆட்டத்தில் 7 வெற்றி, ஒரு தோல்வி, 3 டிராவுடன் 24 புள்ளி பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆர்ஜன்டினா 6-வது இடத்தில் உள்ளது.

00col141124270_5006012_11112016_aff_cmy

Related posts: