பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ்: விலகினார் செரீனா !

Tuesday, June 5th, 2018

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் பெரீஸ் நகரில் இடம்பெற்று வருகின்றது.அதில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்றார்.

36 வயதான செரீனா, குழந்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அவர் முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் மரிய ஷரபோவாவை எதிர்கொள்ள இருந்தார். எனினும் போட்டி ஆரம்பமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, காயம் காரணமாக செரீனா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில், போட்டியில் இருந்து செரீனா விலகியதால் மரிய ஷரபோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Related posts: