பிரெஞ்சு ஓபன்: அடுத்த சுற்றில் சைமோனா!

Friday, June 1st, 2018

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் சுற்றில் அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கேவை எதிர்கொண்ட சைமோனா, 2-6, 6-1, 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-4 என்ற செட்களில் செர்பியாவின் விக்டோரியா குஸ்மோவாவை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா தனது 2-ஆவது சுற்றில் 6-0, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் லாரா அருவாபரினாவை வீழ்த்தினார். இதர 2-ஆவது சுற்றுகளில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-1 என்ற செட்களில் சக நாட்டவரான கரோலின் டோல்ஹைடை வென்றார்.

ஜப்பானின் நஜோமி ஒசாகா 6-4, 7-5 என்ற செட்களில் கஜகஸ்தானின் ஸரினா டியாஸை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 26-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பார்பரா ஸ்டிரைக்கோவா 6-4, 6-2 என்ற செட்களில் ரஷியாவின் எகாடெரினா மகரோவாவை வீழ்த்தினார்.

எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவிட்-ருமேனியாவின் அலெக்ஸான்ட்ரா டல்கெருவையும், ருமேனியாவின் மிஹேலா புஸார்னெஸ்கு-ஸ்வீடனின் ரெபெக்கா பீட்டர்சனையும் வீழ்த்தினர்.

Related posts: