பிரியலக்சன் அபாரசதம் சென்றலைட்ஸ் வெற்றி!

பிரியலக்சனின் அபாரமான சதத்தின் உதவியுடன் இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தில் பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியின் போட்டியொன்றில் யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் அணி வெற்றி பெற்றது.
50 ஓவர்களைக் கொண்ட இச் சுற்றுப்போட்டியானது தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் ஒரு போட்டியொன்று ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து றைரோன் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரியலக்சன் 113 ஓட்டங்களையும் டர்வின் 37 ஓட்டங்களையும் மயூரன் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
றைரோன் அணி சார்பில் அஜந்தன் 9.5 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் விஸ்வரூபன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
261 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய றைரோன் அணி, 36.4 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் மணாளன் 55, நந்தகுமார் 40, திலக்சன் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக டர்வின் 8 ஓவர்கள் பந்துவீசி 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும் மயூரன் 10 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலன்ராஜ், தசோபன், ஜேம்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Related posts:
|
|