பிரிமியர் புட்சால் லீக்: முதல் ஆட்டத்தில் மும்பை வெற்றி!

Saturday, July 16th, 2016

பிரிமியர் புட்சால் லீக் போட்டி இந்தியாவில் முதன்முறையாக நேற்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் ஐவர் கால்பந்து என அழைக்கப்படும் புட்சால் போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரிமியர் புட்சால் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான தூதராக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நடந்த தொடக்க போட்டியில் பால்காவ் நடசத்திர வீரராக உள்ள சென்னையும், ரியான் ஜிக்சின் மும்பை அணியும் மோதின. தலா 10 நிமிடங்கள் என நான்கு பகுதிகளாக பிரித்து போட்டி நடத்தப்பட்டது.ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி போக்லியா முதல் கோலை பதிவு செய்தார்.

11-வது நிமிடத்தில் ஏஞ்சல்லாட் 2-வது கோலை அடித்தார். இதனால் மும்பை 2-0 என முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தில் மும்பை மேலும் ஒரு கோல் அடித்தது.33-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து மும்பை அணி 4-0 என வலுவான முன்னிலை பெற்றது. 34-வது மற்றும் 36-வது நிமிடத்தில் சென்னை அணி கோல்கள் அடித்தது. இதனால் மும்பை அணி 4-2 என வெற்றி பெற்றது.

இதைதொடர்ந்து நடந்த 2வது போட்டியில் கோவா – கொல்கத்தா அணிகள் மோதின. போட்டிக்கு முன் கோவா அணிக்காக களமிறங்கிய பிரேசில் நட்சத்திர வீரர் ரொனால்டினோவுக்கு ரசிகர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4-2 என கோவா அணியை வீழ்த்தியது.

Related posts: