பிரித்தானிய ரக்பி வீரர் உயிரிழப்பு!

Monday, May 14th, 2018

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய நாட்டு ரக்பி வீரர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்புறவு ரக்பி போட்டியொன்றிற்கு பங்கேற்பதற்காக கடந்த 10 ஆம் திகதி 22 பேர் கொண்ட பிரித்தானிய ரக்பி அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் போட்டிகள் நடந்துள்ளதாகவும் பின்னர் குறித்த வீரர்களுக்கு இரவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அன்றிரவு மறுபடியும் கொள்ளுபிட்டியில் உள்ள களியாட்ட விடுதியொன்றிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மற்றுமொரு வீரருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts: