பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ உட்பட பலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

Sunday, December 4th, 2016

ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் பிரபல வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமாக மில்லியன் கணக்கான டொலர் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் இரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல்கள், ரகசிய உடன்படிக்கைகள், ரகசிய ஒப்பந்தங்கள் என சுமார் 18 மில்லியன் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவலை பல ஐரோப்பிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ரொனால்டோவை தவிர்த்து ஜோஸ் மொரின்ஹோ, மான்செஸ்டர் யுனைடட் அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் மெண்டீஸ் ஆகிய பிரபலங்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிஷ் அதிகாரிகளை ரொனால்டோ மற்றும் மொரின்ஹோ ஆகிய இருவரும் தங்களுடைய வரி தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அதிகாரிகளிடம் முழுமையாக பூர்த்தி செய்திருப்பதாக மெண்டீஸ் நிறுவனமான கெஸ்டிஃபூட் தெரிவித்துள்ளது.

_92819037_gettyimages-627366666

Related posts: