பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி காலமானார்!

Saturday, June 4th, 2016

பிரபல உலக குத்துச் சண்டை வீரரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 வது வயதில் காலமானார்.
சுவாசக் கோளாறு காரணமாக அவர் கடந்த வியாழக்கிழவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே (Cassius Marcellus Clay) என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்த பின் தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார்.

1942ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி பிறந்த தி கிரேடேஸ்ட் (The Greatest), தி லூயிவிள்ளே லிப் (The Louisville Lip) என்ற பல்வேறு பட்டப் பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.

இவர் கலந்து கொண்ட 61 குத்துச் சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 05 போட்டிகளிலேயே தோல்வியடைந்துள்ளார்.

Related posts: