பிபா உலக்கிண்ண  இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட்!

Sunday, December 17th, 2017

சர்வதேச உதைப்பந்தாட் சம்மேளத்தின் அனுசரணையோடும் ஏற்பாட்டோடும் நடைபெற்று வருகின்ற கழக மட்ட அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு ரியல் மெட்ரிட் அணி முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட கழகமான ரியல் மெட்ரிட், ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதைப்பந்தாட்ட கழகமான அல் ஜெசீராவை வெற்றிகொண்டதனடிப்படையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

விறுவிறுப்பான இந்த போட்டியில் ரியல் மெட்ரிட் அணி பல வாய்ப்புகளை தவறவிட்டது. போட்டியின் 43வது நிமிடத்தில் அல் ஜெசீரா அணிமுதல் கோல் அடித்தது. அந்த அணியின் ரொமாரின்ஹோ குறித்த கோலை அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். கோல்கள் இன்றி இரண்டாவது பாதியை ஆரம்பித்த ரியல் மெட்ரிட் அணி சார்பில் ரொனால்டோ 53வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை சமப்படுத்தினார். இரு அணிகளும் வெற்றிக்காக போராடின. இறுதியில் போட்டியின் 81வது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் கெரத் பேல் வெற்றிக்கான கோலை அடித்தார்.

ரியல் மெட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ரியல் மெட்ரிட் அணி கிரெமியோ அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

Related posts: