பிடியெடுப்புக்களை தவற விடுவது உடற்தகுதி பிரச்சினையன்று – மஹேல !
Monday, July 3rd, 2017
எந்தவொரு கிரிக்கட் வீரரும் போட்டியின் போது பிடியெடுப்பை தவறவிட்டால் அது அவரின் உடற் தகுதி தொடர்பான பிரச்சினை இல்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிடியெடுப்புக்கள் தவற விடுவது அந்த கிரிக்கட் வீரரின் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார்.பெர்முடா அணியின் வீரர் ஒருவரது புகைப்படத்துடன் மஹல ஜயவர்தன தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த பதிவை வெளிட்டுள்ளார்.இதேவேளை, இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களான லக்ஷான் சந்தகேன் மற்றும் வனிது ஹசரங்க ஆகியோரை அணியில் இணைத்து கொண்டுள்ளமை தொடர்பில் கிரிக்கட் தெரிவுக் குழுவிற்கு தனது நன்றியையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
2017 உலகக் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை அணி?
டெரன் லீமனின் முடிவு!
21 ஆம் நூற்றாண்டின் உலகின் சிறந்த வீரராக முரளி - விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகை!
|
|