பிசிசிஐயின் பொது மேலாளர் சபா கரீம் இராஜினாமா!

பிசிசிஐயின் பொது மேலாளர் பதவியை முன்னாள் வீரர் சபா கரீம் இராஜினாமா செய்துள்ளார்.
பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பதவி விலகும் நான்காவது உயர் அதிகாரி இவர். இதற்கு முன்பு ராகுல் ஜோரி (தலைமைச் செயல் அதிகாரி), சந்தோஷ் ரங்னேகர் (தலைமை நிதி அலுவலர்), டுஃபான் கோஷ் (நேஷனல் கிரிக்கெட் அகாதமியின் தலைமை அதிகாரி) ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள்.
சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த சபா கரீம், பிறகு 2017-ல் பிசிசிஐயின் பொது மேலாளர் (கிரிக்கெட் பணிகள்) பொறுப்புக்கு வந்தார். ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான ஆட்டங்கள் மற்றும் உள்ளூர் ஆட்டங்கள் தொடர்பான அட்டவணையைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். ஒரு டெஸ்ட், 34 ஒருநாள் ஆட்டங்களில் சபா கரீம் விளையாடியுள்ளார்.
Related posts:
இந்திய வீரர் இலங்கையில் சாவு!
உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் கிடையாது - இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா ...
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டி இன்று - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதி...
|
|