பாலின சர்ச்சையால் பதக்கம் பறிக்கப்பட்ட வீராங்கனைக்கு அரசு வேலை!

Monday, October 17th, 2016

பாலின சர்ச்சையால் ஆசிய விளையாட்டுப் போட்டி பதக்கம் பறிக்கப்பட்ட தமிழக தடகள வீராங்கனை சாந்தி, தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கபடவுள்ளார்.

அதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, அவரின் பதக்கத்தை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்போது பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் சாந்தி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2006ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டியில் , 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனை முடிவில் எதிர்மறையான முடிவு வந்ததால், அவர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

_91946698_one

Related posts: