பார்சிலோனாவுக்கு அபார வெற்றி!

Monday, September 19th, 2016

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரின், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

லா லிகாவுக்குபுதிதாக தரமுயர்த்தப்பட்ட லெயானிஸ் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்கடித்துள்ளது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் லூயிஸ் சுவாரஸ், நேமர், றபின்ஹா ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர்.

பார்சிலோனாவின் இறுதி லா லிகா போட்டியில், மெஸ்ஸியும் சுவாரஸும் ஆரம்பித்திருக்காத நிலையில், லா லிகாவுக்கு தரமுயர்த்தப்பட்ட இன்னொரு அணியான அலவேஸிடம் பார்சிலோனா அதிர்ச்சித் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையிலேயே, மேற்படி போட்டியை, நேமருடன் இணைந்து மெஸ்ஸியும் சுவாரஸும் ஆரம்பித்த நிலையில், வெற்றி வழிகளுக்கு பார்சிலோனா திரும்பியுள்ளது.

இதேவேளை, ஸ்போர்ட்டிங் ஜிஹோன் அணியை, 5-0 என்ற கோல்கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்கடித்துள்ளது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, அந்தோனி கிறீஸ்மன், பெர்ணான்டோ டோரஸ் ஆகியோர் இரண்டு கோல்களையும் கெவின் கமெய்ரோ ஒரு கோலினையும் பெற்றனர். கடந்த இரண்டு லா லிகா போட்டிகளையும் சமநிலையில் முடித்துக் கொண்ட அத்லெட்டிகோ மட்ரிட்டுக்கு, இப்போட்டியில் பெற்ற வெற்றி, வரவேற்பளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

gettyimages-Barcelona-vs.-Sporting-Gijon

Related posts: