`பார்சிலோனா`அணியிலிருந்து விலகும் மெஸ்ஸி !

Wednesday, August 26th, 2020

பிரபல காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி தனது ஆஸ்தான அணியான பார்சிலோனாவிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய காற்பந்தாட்தத்  தொடரில் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய பார்சிலோனா அணி காலிறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சிடம் 8 க்கு 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில், இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள கொரோனா பரிசோதனைக்கு தான் வரப்போவதில்லை எனவும், அணியிலிருந்து உடனடியாக விலக விரும்புவதாகவும் பார்சிலோனா அணியின் நிர்வாகத்திடம், மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுமெ  அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மெஸ்ஸி தனது 13 ஆவது வயதிலிருந்து பார்சிலோனா அணியில் இடம்பெற்றுவருகிறார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Related posts: