பாடும்மீன் அணி வெற்றி!

Thursday, February 8th, 2018

நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்ப்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் பாடும்மீன், திருக்குமரன் அணிகள் வெற்றிபெற்றன.

கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் தொடரின் ஆட்டங்கள் இடம்பெற்றன. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஒலிம்பியா விளையாட்டுக்கழக அணி மோதியது. 5:1 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தில் திருக்குமரன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது. 4:2 என்ற கோல் கணக்கில் திருக்குமரன் விளையாட்டுக் கழக அணி வெற்றிபெற்றது.

Related posts: