பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து – சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றி!
Friday, July 6th, 2018இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 18 வயது , பிரிவு – 1 அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
2 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பு சென்.பெனடிக்ற் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது.
முதற்பாதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி இரண்டு கோல்களைப் போட்டது.
இரண்டாவது பாதியாட்டத்தில் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு சென்.பற்றிக்ஸ் 04:00 என்று தங்கள் வெற்றியை உறுதி செய்தது. சென்.பற்றிக்ஸ் அணி சார்பாக ஏ.பி.டிலக்சன் 3 கோல்களையும் றஜிந்தன் ஒரு கோலையும் அடித்தனர்.
Related posts:
யூரோ 2016 சர்வதேச கால்பந்து போட்டிக்கு எச்சரிக்கை!
இலங்கையில் களமிறங்கும் ஆஸி பிரபலம்!
தரங்க அதிரடி: தம்புள்ளை அணியை வீழ்த்தி காலி !
|
|