பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் கொக்குவில் இந்துக் கல்லூரி வெற்றி!

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் அணியை வென்றது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி.
நேற்று முன்தினம் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.பற்றிக்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 53 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக திவிகரன் 21 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் கௌதமன் 4, தனோஜ் 3, அர்ஜன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 54 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி நான்கு விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் கௌதமன் 24 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார் பந்துவீச்சில் டெஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Related posts:
ஹெராத் ஓய்வு!
தம்மிக்க பிரசாத்திற்கு அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை!
வடக்கில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் - மாவட்ட ரீதியில் ஆரம்பம்!
|
|