பாக்குநீரிணைக் கடலை நீந்தி சென்னை மாணவன்சாதனை!

Monday, March 26th, 2018

சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்த ராஜஈஸ்வர பிரபு என்ற மாணவன் இலங்கை தலைமன்னாருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கும் இடையில் 33 மைல் தூரமுள்ள பாக் கடலை நீந்தியுள்ளார்.

அதிகாலை 3.10 மணிக்கு தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த துவங்கிய ராஜஈஸ்வர பிரபு,  மாலை 3.05 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை வந்தடைந்தார். வழியில் ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக இவர் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

”தலைமன்னார் கடல் பகுதியில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நீரோட்டம் அதிகமாக இருந்தது. அதன்பின் கடல் நிலை நன்றாக இருந்தது.

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சிறிது கஷ்டமாக இருந்தது. கடலில் ஆழமாக இருந்த பல இடங்களில் படகில் இருந்தவர்கள் உதவிகரமாக இருந்தனர். இந்திய கடல் எல்லையில் இருந்து எங்களை தலைமன்னாருக்கு அழைத்து செல்லும்போதும், மீண்டும் கடலில் நீந்தி இந்திய எல்லை வரை வரும்போதும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக உடன் வந்தனர்” என்று ராஜஈஸ்வர பிரபு தெரிவித்துள்ளார்.

Related posts: