பாகிஸ்தான் 2019 உலக கிண்ணத்திற்கு தகுதி பெறுவதில் சிக்கல்!
Wednesday, September 7th, 2016
ஒருநாள் கிரிக் கெட் தரவரிசையில் பாகிஸ்தான் இதுவரை இல்லாத அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் நேரடியாக 2019 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து– பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்தொடர் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 4 போட்டிகளை வென்று 4–0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வைட்வொஷ்ஷை தவிர்த்தது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் 87 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்த தொடரை 1-–4 என இழந்ததால் ஒரு புள்ளி சரிந்து 86 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசை முறையை 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதில் இருந்து பாகிஸ்தான் தரவரிசையில் இவ்வளவு மோசமான அடிபாதாளத்திற்குச் சென்றது கிடையாது. முதன்முறையாக 86 புள்ளிகளை பெற்று 9-ஆவது இடத்தில் உள்ளது.
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணத் தொடருக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும். மற்ற அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடிய பின்னரே முதன்மை சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|