பாகிஸ்தான் வீரர் ஒருவருக்கு வாழ்நாள் தடை!

Friday, November 3rd, 2017

சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃப் மீதான தடையை வாழ்நாள் தடையாக நீடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் காலித் லதீஃப் மற்றும் ஷார்ஜில் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

லதீஃபிற்கு அபராதமாக பத்து லட்சமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லதீஃப் மீது வாழ்நாள் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர் தபசுல் ரிஸ்வி கூறுகையில் –

காலித் லத்தீஃபிற்கு வழங்கப்பட்ட தடை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எங்களின் கொள்கை, ஊழல் இல்லாத விளையாட்டு வீரர்களை கொண்டிருப்பதாகும்.ஆனால், அதனை மீறும் வகையில் லத்தீஃப்பும், ஷார்ஜீலும் நடந்து கொண்டனர்.

ஷார்ஜீல் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு ஐந்து ஆண்டுகள் தடை மட்டும் தான் விதிக்கப்பட்டது. ஆனால், லத்தீஃபிற்கு தடையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்பட்டது.ஏனெனில், அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டத்தோடு அல்லாமல் சக அணி வீரரையும் ஈடுபடுத்தியுள்ளார். எனவே தான் அவர் மீது கிரிக்கெட் விளையாடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்க மேல்முறையீடு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: