பாகிஸ்தான் -வங்கதேச தொடர் மிஸ்ரா காயம்: குல்தீப்புக்கு வாய்ப்பு!

Wednesday, February 8th, 2017
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து, காயம் காரணமாக அமித் மிஸ்ரா விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக, இளம் வீரரான குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது அவர் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டியாகும்
.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின்போது அமித் மிஸ்ராவுக்கு காயம் ஏற்பட்டது. எனினும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவதாக இருந்தது.
இந்நிலையில், அவருக்கான காயத்தின் வீறியத்தை கண்டறிய அவர் தொடர்ந்து மருத்துவ சோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டியுள்ளதால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டார்.இதையடுத்து, உள்நாட்டுப் போட்டிகளில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் குல்தீப் யாதவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. துலிப் டிராபி, ரஞ்சி டிராபி போட்டிகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப், மொத்தம் 22 போட்டிகளில் 81 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

amith_vc1

Related posts: