பாகிஸ்தான் பிரிமியர் லீக் கிண்ணம் இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்கு!

2018ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் பிரிமியர் லீக் (PPL) போட்டியின் இறுதி போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடட் அணி 03 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை வெற்றிக் கொண்டது.
கராச்சியில் இடம்பெற்ற இறுதி போட்டியில் பெஷாவர் ஸல்மி அணியை வெற்றி கொண்டதன் மூலம் இரண்டாவது தடவையாகவும் இஸ்லாமாபாத் யுனைடட் அணி வெற்றி கிண்ணத்தை பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெஷாவர் ஸல்மி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்த இஸ்லாமாபாத் யுனைட்டட் அணி 16.5 ஓவர்களில் 07 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதன் மூலம் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணி இரண்டாவது தடவையாகவும் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது.
Related posts:
மேர்கன்- ஹேல்ஸ் பங்களாதேஸ் தொடரிலிருந்து விலகல்!
புதிய தொழிநுட்பத்துடன் களமிறங்கும் ஐபிஎல்!
கிரிக்கட் நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது சர்வதேச கிரிக்கட் பேரவை!
|
|