பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் சாதனை!

Wednesday, January 4th, 2017

தென்னாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டி இவருக்கு 332 ஆவது போட்டியாகும்.

அலீம் தார் 2000ஆம் ஆண்டு முதன் முதலில் டெஸ்ட் போட்டி ஒன்றில் நடுவராகக் கடமையாற்றியிருந்தார். இதற்க முன்னர் அதிக டெஸ்ட்களில் நடுவராகப் பணியாற்றியவர் தென்னாபிரிக்காவின் ரூடி கேர்ட்சன் ஆவார். இவர் 331 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியதுடன், 2010இல் ஓய்வு பெற்றார்.

21563Aleem-dar-copy

Related posts: