பாகிஸ்தான் தலைவரை அதிர்ச்சியடைய வைத்துள்ள சம்பவம்!

Friday, October 27th, 2017

சூதாட்டக்காரர்கள் தன்னை தன்னை சந்திக்க முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவித்ததன் பின்னரே தான் ஆறுதல் அடைந்ததாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னை பற்றி தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான நிலையில், அதிக பயம் ஏற்பட்டதாக நேற்று வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தான் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவர் மேலும் கூறியுள்ளார்.சூதாட்டக்காரர்கள் பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட்டை சந்திக்க முயற்சி செய்ததாக சர்வதேச கிரிக்கட் சபை வெளிப்படுத்தியிருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் சேதியே முதலில் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.சர்பராஸ் அஹமட்டின் இந்த செயற்பாடானது, அனைத்து கிரிக்கட் வீரர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts: